எஸ்.எஸ்.ஐ., வீட்டில் வெடித்த பிரிட்ஜ்: மின்சாதன பொருட்கள் சேதம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி, ஏமப்பேர், முதல் ஸ்கூல்தெருவை சேர்ந்தவர் கொளஞ்சி மகன் செந்தில்குமார்,47; சிறப்பு சப் இன்ஸ்பெக்டர். இவர் தற்போது டி.எஸ்.பி., அலுவலகத்தில் பணிபுரிகிறார். நேற்று வழக்கம்போல் பணிக்கு சென்றுவிட்டார். வீட்டில், தாய் சரோஜா, மனைவி தமிழரசி, மகள் ஜனஸ்ரீ இருந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை 4:30 மணியளவில் வீட்டின் சமையலறையில் இருந்த பிரிட்ஜ் பலத்த சத்தத்துடன் வெடித்தது. உடன் வீட்டினுள் இருந்த சரோஜா அலறி அடித்து வெளியே வந்தார். தொடர்ந்து, தீ பரவி வீடு முழுதும் புகைமூட்டமாக மாறியது. தகவலறிந்த கள்ளக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில், வீட்டிலிருந்த கிரைண்டர், டி.வி., உள்ளிட்ட மின்சாதன பொருட்கள், பாத்திரங்கள் என ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கருகி சேதமடைந்தன. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement