கொலை வழக்கில் மூவருக்கு குண்டாஸ்

திண்டுக்கல்: வெவ்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட மூவர் குண்டாஸில் கைது செய்யப்பட்டனர்.

ஒட்டன்சத்திரத்தில் மார்ச் 9ல் ஒருவரை கொலை செய்த வழக்கில் திருப்பூர் கருவம்பாளையத்தைச் சேர்ந்த சுடலை முத்து 26, அரசு பள்ளி கழிவறையில் சிறுமிகளை அலைபேசியில் ஆபாசமாக போட்டோ எடுத்த வழக்கில் குஜிலியம்பாறை ரெட்டியபட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் 35, சிறுமியை கர்ப்பமாக்கியதற்காக போக்சோவில் ஒட்டன்சத்திரம் நாகப்பன்பட்டி காலனியைச் சேர்ந்த ரினித்குமார் 24 ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மூவரும் மாவட்ட சிறையில் நீதிமன்றக்காவலில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், எஸ்.பி., பிரதீப் பரிந்துரைத்ததன் அடிப்படையில் கலெக்டர் சரவணன் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். மூவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement