புதிய நுாலக கட்டடங்கள் திறப்பு விழா

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டு, நிலக்கோட்டை பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட கிராம நூலக கட்டடங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

தலா ரூ. 22 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நூலக கட்டடங்கள் நேற்று திறந்து வைக்கப்பட்டன. எழுவனம்பட்டியில் வத்தலக்குண்டு பி.டி.ஓ., குப்புசாமி, முன்னாள் ஒன்றிய துணைத் தலைவர் முத்து ஆகியோர் திறந்து வைத்தனர். நூலகர் கருப்பையா, இளநிலை உதவியாளர் நாச்சியப்பன், ஊராட்சி செயலாளர் மணிகண்டன் பங்கேற்றனர்.

பள்ளப்பட்டி, கல்லடிபட்டியில் தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் குத்துவிளக்கு ஏற்றினார். பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், ஒன்றிய துணைச் செயலாளர் வெள்ளிமலை பங்கேற்றனர்.

Advertisement