சுட்டெரிக்கும் கோடை வெயில்: வந்துவிட்டது குஜராத் மண்பானை

காரைக்குடி: காரைக்குடியில், கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் மண்பானை விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
கோடை தொடங்கிய நிலையில் தமிழகம் முழுவதும், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கொளுத்தும் வெயிலில் இருந்து தங்களைப் பார்த்துக் கொள்ள பொதுமக்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்காத, மண்பானையில் வைத்த குடிநீரை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரில், மண்பானை, கூஜாக்கள் பல்வேறு வடிவங்களிலும், பல வண்ணங்களிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. குஜராத், மானாமதுரை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மண்பானைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
வியாபாரி பாண்டி கூறுகையில்: வெயில் காலத்தில் மக்கள் இயற்கையான குளிர்ந்த நீரை பருக மண்பானையை விரும்பி வாங்குகின்றனர். மானாமதுரை மதுரை திருநெல்வேலி மட்டுமின்றி குஜராத்தில் இருந்தும் மண்பானை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.
குஜராத் மண்பானை பார்ப்பதற்கு அழகாக காணப்படும். குழாய் பொருத்தப்பட்டுள்ள மண் பானையை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
ரூ.170 முதல் ரூ. 600 வரை பானைகள் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும்
-
ஜிப்லி போட்டோக்களால் சைபர் குற்றங்களுக்கு ஆளாகும் அபாயம்: போலீசார் எச்சரிக்கை
-
திருப்பதி- காட்பாடி இடையே 104 கி.மீ., தூரம் இரட்டை ரயில் பாதை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
-
தேரோட்டம் கண்ட கபாலீஸ்வரர்..
-
அரசு விழாவுக்கு கட்டாய வசூல்: டாக்டரின் புலம்பல் ஆடியோ 'லீக்'
-
காஷ்மீரில் என்கவுன்டர்: 3 பயங்கரவாதிகள் சுற்றி வளைப்பு
-
வக்ப் திருத்த சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த மாட்டோம்; முதல்வர் மம்தா பானர்ஜி