திருப்பதி- காட்பாடி இடையே 104 கி.மீ., தூரம் இரட்டை ரயில் பாதை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி: திருப்பதி- காட்பாடி இடையே 104 கி.மீ., தூரத்துக்கு இரட்டை ரயில் பாதை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: திருப்பதி - பகாலா - காட்பாடி இடையிலான சுமார் 104 கி.மீ., தொலைவுள்ள ஒற்றை ரயில் பாதையை, இரட்டை ரயில் பாதையாக மாற்ற ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பரந்தூர் விமான நிலையம்
அதேபோல், பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு கொள்கை ரீதியில் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு வெளியிட்டுள்ள அறிக்கை:
பரந்தூர் விமான நிலையத்திற்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் கொள்கை ரீதியான ஒப்புதலை வழங்கியுள்ளது என்பதை பகிர்ந்து கொள்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
பிரதமர் மோடியின் தலைமையின் கீழ், நாடு முழுவதும், குறிப்பாக டில்லி, மும்பை மற்றும் சென்னை போன்ற பெருநகரங்களில் இரண்டாவது விமான நிலையங்களை உருவாக்குவதன் மூலம், பயணிகள் தேவைக்கு தீர்வு காண முடியும்.
தமிழகத்தின் விமான உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உறுதிபூண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












மேலும்
-
பெண்ணை மிரட்டி பணத்தை திருடிய இளைஞர் ஒரு மணி நேரத்தில் கைது
-
தடுப்பணையில் சேரும் கழிவுநீர் காக்களூர்வாசிகள் கடும் அதிருப்தி
-
ஏ.டி.எம்., கார்டு மாற்றி பணம் திருடிய நபர் கைது
-
வெடிச்சத்தத்தால் அச்சப்பட தேவையில்லை: கலெக்டர்
-
காதலித்து கை விட்ட பெண் மீது நடவடிக்கை வேண்டும் * எஸ்.பி.,யிடம் காதலன் மனு
-
போலீசுக்கு பயந்து ஜன்னல் வழியாக தப்பி ஓடிய அஜித் பட நடிகர்