தேரோட்டம் கண்ட கபாலீஸ்வரர்..

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தேரோட்டம் வெகு சிறப்பாக இன்று நடைபெற்றது.
காலை 6 மணிக்கு கற்பாகம்பாள் சமேதரராய் கபாலீஸ்வரர் தேருக்கு எழுந்தருளும் போதே பக்தகர்கள் கூட்டம் அலைமோதியது.
இந்தக் கோவில் தேரோட்டத்தின் போதுதான் பல பழமையான விஷயங்களைக் காணமுடிந்தது.
நிறைய சிவனடியார்கள் ருத்ராட்சத்தாலான சிவலிங்கத்தை சுமந்து வந்தனர்
கபாலி..கபாலி என்ற முழக்கத்துடன் கயிலாய வாத்தியம் முழங்கும் போது அவர்களில் பலர் பக்தி பெருக்கெடுத்து ஆடினர்.
விதவிதமான வாத்தியங்கள் சங்குகள் மற்றும் பல வாத்தியக்கருவிகளை காணமுடிந்தது.
திரும்பிய பக்கமெல்லாம் சாம்பிராணி புகை போட்டதால் மயிலாப்பூரே பக்தி மணம் கமழ்ந்தது.
வெயிலுக்கும் குறைவில்லை பக்தர்களுக்கும் குறைவில்லை
திரும்பிய பக்கமெல்லாம் அன்னதானம் மோர் மற்றும் பானகம் வழங்கினர்.
மொத்தத்தில் தேரோட்டம் என்பது ஒரு ஆனந்தத்திருவிழாவாக நடந்து முடிந்தது.
-எல்.முருகராஜ்