கிரைம் கார்னர்

பெங்களூரு பீன்யா அருகே கரியோபனஹள்ளியில் நேற்று காலை காலியிடத்தில் வாலிபர் இறந்து கிடந்தார். அவரது முகத்தில் பலத்த வெட்டு காயம் இருந்தது. போலீஸ் விசாரணையில், இறந்து கிடந்த வாலிபர் பீஹார் மாநிலத்தின் விகாஸ்குமார் மஹோத், 25 என்பதும், அவரை யாரோ கொலை செய்து உடலை இங்கு வீசி சென்றதும் தெரிந்தது.

பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே பட்டந்துார் ஏரி கரையில் நேற்று மாலை 6:30 மணிக்கு ஒரு டிராக்டர் சென்றது. பள்ளத்தில் இருந்து ஏற முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. டிராக்டரில் அடியில் சிக்கி இசினகா பட், 9 என்ற சிறுமி உயிரிழந்தார். டிராக்டரை ஓட்டிய சிறுமியின் தந்தை படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.

பெங்களூரு அன்னபூர்னேஸ்வரி நகரை சேர்ந்தவர் ரமேஷ். தனியார் வங்கியில் கடன் வாங்கி பைக் வாங்கினார். கடந்த இரண்டு மாதமாக மாதாந்திர தவணை பணம் கட்டவில்லை. இதனால் வங்கி ஊழியர் சந்தன், ரமேஷுக்கு மொபைல் போனில் அடிக்கடி தொடர்பு கொண்டு பணம் தரும்படி கேட்டு உள்ளார். பணம் தருவதாக கூறி நேற்று முன்தினம் நாகரபாவி பி.டி.ஏ., வளாகத்திற்கு சந்தனை, ரமேஷ் வரவழைத்தார். அங்கு வைத்து சந்தனை கல்லால் தாக்கிவிட்டு தப்பினார்.

பெங்களூரு இந்திராநகர் அருகே பின்னமங்களாவில் வசிப்பவர் விஷ்ணு, 23; ரவுடி. கடந்த 2019ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டார். சில வழக்குகளில் ஜாமினில் வெளியே வந்து, நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். இதனால் அவரை நேற்று குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

குண்டாசில் ரவுடி கைது

Advertisement