வயலில் தண்ணீர் பாய்ச்சிய போது நிகழ்ந்த விபரீதம்: சிறுவர்கள் உட்பட மூவர் மின் தாக்குதலில் பலி

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் மின்சாரம் பாய்ந்ததில் 2 சிறுவர்கள் உட்பட மூவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.



இதுபற்றிய விவரம் வருமாறு:


நாமக்கல் மாவட்டம், மோகனூர் அருகே உள்ளது ஆண்டாபுரம். இந்த கிராமத்தின் உள்ள வயல் ஒன்றில் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்கும் போது, வேலியில் மின்சாரம் பாய்ந்தது.


அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் சுஜித், 5, ஐவிலி, 3 மின்சாரம் பாய்ந்ததில் இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இருவரின் அலறலை கேட்டு காப்பாற்ற சென்ற பாட்டி இளஞ்சியமும் 50 உயிரிழந்தார்.


பேரன்கள், அவர்களின் பாட்டி மின்சாரம் பாய்ந்து இறந்து போனதால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.

தகவலறிந்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement