சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினரிடம் நக்சல்கள் 26 பேர் சரண்!

தண்டேவாடா: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினரிடம் நக்சலைட்டுகள் 26 பேர் சரண் அடைந்தனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் அண்மைக்காலமாக நக்சலைட்டுகளின் தாக்குதல்களை பாதுகாப்பு படையினர் முறியடித்து வருகின்றனர். தொடரும் இதுபோன்ற நடவடிக்கைகளினால் அங்கு தலைமறைவாக இருக்கும் பல நக்சலைட்டுகள் சரண் அடையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
அந்த வகையில், தண்டேவாடாவில் 26 நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினரிடம் சரண் அடைந்துள்ளனர். இந்த நிகழ்வின் போது அவர்கள் ஆயுதங்களையும் ஒப்படைத்துள்ளனர். இந்த விவரத்தை மாநில எஸ்.பி. கவுரவ் ராய் வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது; சரண் அடைந்தவர்களின் ராஜேஷ் காஷ்யப் என்பவரின் தலைக்கு ரூ.3 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு இருந்தது. இவர்கள் தவிர கோசா மாத்வி என்பவர் தலைக்கு ரூ. 1 லட்சம், சோட்டு குஞ்சம் என்பவரை பிடித்துக் கொடுத்தால் ரூ.50.000 என அறிவிக்கப்பட்டு இருந்தது. இவர்கள் 3 பேரும் தற்போது சரண் அடைந்தவர்களில் முக்கியமானவர்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும்
-
பயங்கரவாதி தஹாவூர் ராணாவின் அவசர மனு: அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நிராகரிப்பு
-
14 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கும் பணி நிறுத்தம்: ஹஜ் நெரிசல் தவிர்க்க சவுதி நடவடிக்கை
-
ஹாரி புரூக் புதிய கேப்டன்: இங்கிலாந்து அணிக்கு
-
தங்கம் வென்றார் ருத்ராங்க்ஷ்: உலக துப்பாக்கி சுடுதலில்
-
பட்டிதார், விராத் கோஹ்லி அரை சதம்: மும்பை அணிக்கு 222 ரன்கள் இலக்கு
-
துபாய் பட்டத்து இளவரசர் இந்தியா வருகிறார்; பிரதமர் மோடியை சந்திக்கிறார்!