பட்டிதார், விராத் கோஹ்லி அரை சதம்: மும்பை அணிக்கு 222 ரன்கள் இலக்கு

மும்பை: மும்பை அணிக்கு வெற்றி இலக்காக 222 ரன்களை நிர்ணயித்தது பெங்களூரு அணி.

பிரிமீயர் கிரிக்கெட் 2025 தொடரின் 20வது போட்டி, மும்பை அணிக்கும் பெங்களூரு அணிக்கும் இடையே ஆன போட்டி மும்பையில் நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற மும்பை அணி, பந்து வீச்சு தேர்வு செய்தது.

பிரிமீயர் வரலாற்றில் இதுவரை இவ்விரு அணிகள் மோதிய 33 போட்டிகளில் மும்பை அணி 19 முறை வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரு அணி 14 முறை வெற்றி பெற்றுள்ளது.

முதலில் ஆடத்துவங்கிய, பெங்களூரு அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக பில் சால்ட் மற்றும் விராத் கோஹ்லி களமிறங்கினர்.

இதில் பில் சால்ட் 4 ரன்களில் டிரன்ட் போல்ட் பந்தில் போல்டாகி வெளியேறினார்.

பட்டிதார், விராத் கோஹ்லி நிதானமாகவும் சிறப்பாக ஆட்டத்தை துவக்கினார். அவர் 42 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 8 பவுண்டரிகள் என சிறப்பான ஆட்டத்தால் அரைசதம் கடந்து 67 ரன்களில் பாண்ட்யா பந்தில் ஆட்டமிழந்தார்.

அவரை தொடர்ந்து படிக்கல் 37 ரன்களுக்கு புத்துார் பந்தில் வெளியேறினார்.

லிவிங்ஸ்டோன் ரன் ஏதும் எடுக்காமல் பாண்ட்யா பந்தில் ஆட்டமிழந்தார்.

ரஜத் பட்டிதார் அதிரடியாக விளையாடி, 4 சிக்ஸர்களும் 5 பவுண்டரிகள் அடித்து அரைசதம் கடந்தார்.32 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து போல்ட் பந்தில் அவுட் ஆனார்.

ஜிதேஷ் சர்மா ஆட்டமிழக்காமல் 19 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார்.

முடிவில் பெங்களூரு அணி,20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்தது.

மும்பை அணியின் டிரண்ட் போல்ட், பாண்ட்யா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
மும்பை அணிக்கு வெற்றி இலக்காக 222 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisement