'காஸ் ஸ்டவ்' உதிரி பாக கிடங்கில் திருடியவர் கைது

பூக்கடை, சென்னை, பார்க் டவுன், வெங்கு செட்டி தெருவைச் சேர்ந்தவர் பேராராம், 39. பார்க் டவுன் பகுதியில், 'காஸ் ஸ்டவ்' உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் மூன்று கடைகளை நடத்தி வருகிறார்.

கடைகளுக்கான கிடங்கு, நைனியப்பன் மேஸ்திரி தெருவில் உள்ளது. அங்கிருந்த பொருட்களை கணக்கு பார்த்தபோது, ஏராளமான பொருட்கள், கணக்கில் வராமல் திருடுபோனது தெரிய வந்தது.

இது குறித்து பூக்கடை காவல் நிலைய போலீசார் விசாரித்தனர். இதில், கிடங்கில் 10 ஆண்டுகளாக பணிபுரியும் ஊழியர் பூராராம், 25, என்பவர் மூன்று ஆண்டுகளாக பொருட்களை திருடி, அப்பகுதியிலுள்ள கடைகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

போலீசார் அவரை கைது செய்து, 25,000 ரூபாய் மதிப்பிலான காஸ் ஸ்டவ் பர்னர், காப்பர் பைப்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

Advertisement