சிவகாசியில் கயர் குத்து திருவிழா

சிவகாசி: சிவகாசி திருத்தங்கல் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும், கரும்புள்ளி செம்புள்ளி குத்தியும் உருண்டு கொடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சிவகாசி திருத்தங்கல் மாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா மார்ச் 30 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் அம்மன் சிம்ம, வெள்ளி ரிஷப, கைலாச பருவத , வேதாள, யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி வலம் நடந்தது. நேற்று முன்தினம் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
நேற்று நடந்த கயர் குத்து திருவிழாவில் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தும் கரும்புள்ளி செம்புள்ளி குத்தியும் வேப்பிலையில் உருண்டு கொடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருவிழாவை முன்னிட்டு பட்டாசு ஆலைகள், கல்லுாரிகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது.
மேலும்
-
ஏப்.11 முதல் 13 வரை பழநி கோவிலில் கட்டண தரிசனம் ரத்து!
-
10 மசோதாக்களுக்கு ஒப்புதல்; ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னர் முடிவை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு
-
ஐகோர்ட் நீதிபதிகள் 769 பேர்; சொத்து விவரம் வெளியிட்டது 95 பேர்!
-
இன்றும் ஆபரணத் தங்கத்தின் விலையில் சரிவு; சவரனுக்கு ரூ.480 குறைவு
-
கனடா அரசியலில் கலக்கும் குஜராத் வம்சாவளியினர்: 4 பேர் வேட்பாளர்களாக போட்டி
-
55 கிலோ கஞ்சா பறிமுதல்: மண்டபம் சுங்கத்துறை நடவடிக்கை