இன்றும் ஆபரணத் தங்கத்தின் விலையில் சரிவு; சவரனுக்கு ரூ.480 குறைவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் சரிவு காணப்படுகிறது.



கடந்த வாரத்தில் சில நாட்களாக தங்கம் விலையில் மாற்றங்கள் காணப்படுகிறது. தொடர்ச்சியாக சில நாட்கள் ஏற்றம், அதன் பின்னர் சரிவு என விலைகளில் ஏற்ற இறக்கம் நிலவுகிறது. ஆனால் வெள்ளிக்கிழமை முதல் தங்கத்தின் விலையில் தொடர் சரிவு காணப்படுகிறது.


அதன்படி இன்று ஆபரணத் தங்கத்தின் விலையில் சவரன் ரூ.480 குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ.65,800 ஆக விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ. 8225 ஆக இருக்கிறது.


அட்சய திருதியை நெருங்கும் நிலையில் தங்கத்தின் விலையில் காணப்படும் இந்த மாற்றம், பெண்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.


அனைத்து முன்னணி நாடுகளுக்கும் அமெரிக்கா பரஸ்பர வரி விதித்துள்ளதால் உலகம் முழுவதும் பங்குச் சந்தைகள் வீழ்ச்சி அடைந்துள்ளன.


அதில் ஏற்பட்ட இழப்பை ஈடு கட்டுவதற்காக, தங்கத்தில் முதலீடு செய்த பலரும், விற்கத் தொடங்கியுள்ளனர்.


இதன் காரணமாகவே உலக அளவில் தங்கம் விலை சரிந்து வருகிறது என்று நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement