தனியார் பள்ளி காவலாளி கத்தியால் குத்திக்கொலை

வாணியம்பாடி : தனியார் பள்ளி காவலாளி, பள்ளி வாயில் முன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடியில் கேட்வே பப்ளிக் என்ற தனியார் நர்சரி, பிரைமரி பள்ளி உள்ளது. இங்கு காவலாளியாக ஷாகிராபாத் பகுதியை சேர்ந்த இர்பான், 35, பணிபுரிந்து வந்தார்.

இவரை, நேற்று காலை பள்ளி வாயில் முன், பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், கத்தியால் குத்தி தப்பினர். பலத்த காயமடைந்த இர்பான், சம்பவ இடத்திலேயே பலியானார். வாணியம்பாடி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர். முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.

Advertisement