நேற்றைய தினம் போக்சோ வழக்குகளில் கைதானவர்கள்!

சென்னை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நேற்று (ஏப்ரல் 07) சிலர் போக்சோ வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய போக்சோ
15 வயது சிறுமிக்கு 'தொல்லை'
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரை சேர்ந்தவர் பொன்ராஜ், 55. இவர், கடந்த ஆண்டு மார்ச்சில் ராணிப்பேட்டை அருகே கிராமத்தில் உள்ள தன் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு, வீட்டில் தனியாக இருந்த 10ம் வகுப்பு படிக்கும், 15 வயது சிறுமியை, கத்தியை காட்டி மிரட்டி பலாத்காரம் செய்தார்.
சிறுமியும், அதே பகுதியை சேர்ந்த, சாரதி, 20, என்பவரும் காதலித்து வந்துள்ளனர். அவரும், சிறுமியை அடிக்கடி பலாத்காரம் செய்துள்ளார். ராணிப்பேட்டை மகளிர் போலீசார் பொன்ராஜ், சாரதியை போக்சோவில் கைது செய்தனர்.
'சில்மிஷ' முதியவர் சிக்கினார்
தஞ்சாவூர் அருகே கரந்தையை சேர்ந்த கணேசன், 65, தெருவில் விளையாடிய, 10 வயது சிறுமியை, தனியாக அழைத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமி, அழுதுகொண்டே வீட்டிற்கு வந்ததால், பெற்றோர் விசாரித்தனர்.
சிறுமி தெரிவித்த தகவலையடுத்து, தஞ்சாவூர் மகளிர் போலீசில், பெற்றோர் புகார் அளித்தனர். கணேசனிடம் விசாரணை நடத்தியதில், சிறுமியிடம் அவர் அத்துமீறியது உறுதியானது. போக்சோ சட்டத்தின் கீழ், நேற்று கணேசனை போலீசார் கைது செய்தனர்.
மதபோதகருக்கு வலைவீச்சு
கோவை, கிராஸ்கட் ரோட்டில் உள்ள கிறிஸ்தவ பிரார்த்தனை கூடத்தின் மதபோதகர் ஜான் ஜெபராஜ், 37. கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் வசிக்கிறார். கடந்த, 11 மாதங்களுக்கு முன், இவர் தன் வீட்டில் விருந்து நடத்தினார். அதில் பங்கேற்ற, 14, 17 வயது சிறுமியருக்கு, ஜான் ஜெபராஜ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இது குறித்து, யாரிடமும் கூற வேண்டாம் எனவும், சிறுமியரிடம் தெரிவித்துள்ளார். சமீபத்தில், 14 வயது சிறுமி அளித்த தகவலில், சைல்டு லைன் அமைப்பினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிந்து, ஜான் ஜெபராஜை தேடி வருகின்றனர்.







மேலும்
-
மரணத்தை பரிசாக தந்த பிறந்தநாள் பேனர்: மின்சாரம் பாய்ந்து நண்பர்கள் இருவர் பலி
-
துணைவேந்தர் பதவிகளை விரைந்து நிரப்புங்க: அரசுக்கு சொல்கிறார் ராமதாஸ்
-
வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு; ஏப்ரல் 14ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
-
சபாநாயகர் செயல்பாடு ஒருதலைபட்சமானது: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
ஆண்களுக்கும் விடியல் பயணம்: சட்டசபையில் அமைச்சர் சொன்ன புது தகவல்
-
டாஸ்மாக் வழக்கில் நீதிமன்றத்தை இழிவுபடுத்துவதா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்