கொள்முதல் விலையை குறைப்பதால் கோழிப்பண்ணையாளர்களுக்கு நஷ்டம்
நாமக்கல்: ''கொள்முதல் விலையை விட குறைத்து கோழி பிடிப்பதால், கோழிப்பண்ணையாளர்கள் நஷ்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்,'' என, தமிழக முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி
சுப்ரமணியம் கூறினார்.
தமிழகத்தில், பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதி-களில், 25,000 கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் மூலம், தினமும், 30 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்யப்படுகி-றது. பண்ணை கொள்முதல் விலையை, பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு (பி.சி.சி.,) சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
கடந்த, மார்ச், 1ல், கொள்முதல் விலை, 84 ரூபாய் என நிர்-ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து, ஏற்றம் இறக்கம் காணப்-பட்டு, 31ல், 118 ரூபாய், 3ல், 102 ரூபாய், 5ல், 94, 6ல், 96 ரூபாய் என, விலை நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று, ஏழு ரூபாய் குறைந்து, 89 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறு-கையில், ''கொள்முதல் விலையில் இருந்து, ஒரு கிலோவிற்கு, 20 முதல், 25 ரூபாய் வரை குறைத்தே கோழிகளை பிடிக்கின்றனர். இதனால், பண்ணையாளர்கள் பெரும் நஷ்டத்திற்குள் தள்ளப்பட்-டுள்ளனர். கொள்முதல் விலைக்கே கோழிகளை பிடித்தால் மட்-டுமே, பண்ணையாளர்களுக்கு கணிசமான லாபம் கிடைக்கும்,'' என்றார்.
மேலும்
-
மரணத்தை பரிசாக தந்த பிறந்தநாள் பேனர்: மின்சாரம் பாய்ந்து நண்பர்கள் இருவர் பலி
-
துணைவேந்தர் பதவிகளை விரைந்து நிரப்புங்க: அரசுக்கு சொல்கிறார் ராமதாஸ்
-
வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு; ஏப்ரல் 14ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
-
சபாநாயகர் செயல்பாடு ஒருதலைபட்சமானது: இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
-
ஆண்களுக்கும் விடியல் பயணம்: சட்டசபையில் அமைச்சர் சொன்ன புது தகவல்
-
டாஸ்மாக் வழக்கில் நீதிமன்றத்தை இழிவுபடுத்துவதா? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்