கல்லுாரி மாணவி மாயம்

பெரியகுளம்,: திருச்சி வாழவந்தான்கோட்டை இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர் நிஜன்சன் இவரது மனைவி ஜென்சிலா 38. இவர்களுக்கு ஒரு மகள், இரு மகன்கள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் நிஜன்சன் மனைவி, பிள்ளைகளை பிரிந்து தனியாக உள்ளார்.

பெரியகுளம் தனியார் மகளிர் கல்லூரியில் 21 வயது மகள் விடுதியில் தங்கி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

இவரது மகனை கெங்குவார்பட்டியிலிருந்து அழைத்துக்கொண்டு, கல்லூரிக்கு மகளை பார்க்க தாயார் சென்றுள்ளார். அங்கு விடுதி காப்பாளர் உங்கள் மகள் சாப்பிட வரவில்லை என்றார்.

தோழிகளிடம் விசாரித்தும் மகள் கிடைக்கவில்லை. தென்கரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.-

Advertisement