கல்லுாரி ஆண்டு விழா
தேனி: தேனி நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லுாரியில் ஆண்டு விழா நடந்தது.
தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத்தலைவர் ராஜமோகன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கணேஷ், ஆனந்தவேல், பழனியப்பன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி செயலாளர் குணசேகரன் வரவேற்றார். நாடார் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவியும் நடிகையுமான விஜயலட்சுமி பங்கேற்று பேசுகையில், 'ஆசிரியர்கள் சுயநலமில்லாமல் இருப்பவர்கள். மாணவர்கள் சுயமாக முடிவு எடுக்கும் திறனை வளர்க்க வேண்டும். மனதில் நம்பிக்கை, தன்னம்பிக்கையினை மாணவர்கள் மனதில் விதைக்க வேண்டும்,' என்றார்.
விழாவை கல்லுாரி முதல்வர் பியூலா ராஜினி தலைமையில் உதவி பேராசிரியர்கள் ஜீவிதா, ராஜேஸ்வரி உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர். சிறப்பாக செயல்பட்ட மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement