ஆட்டோ டிரைவர்கள் ரோடு மறியல்

--தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி பகவதிநகர் பஸ்ஸ்டாப்பில் ஆட்டோ ஸ்டாண்ட் உள்ளது.

இதனால் இப்பகுதி மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், வேறு இடத்திற்கு மாற்றக்கோரினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோ டிரைவர்கள், கெங்குவார்பட்டி ஜி.கல்லுப்பட்டி ரோட்டல் தியேட்டர் பஸ்ஸ்டாப் அருகே ஆட்டோக்களை நிறுத்தி ரோடு மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஜி.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் ரோடு மறியலால் பாதித்தனர்.

தேவதானப்பட்டி எஸ்.ஐ.,வேல் மணிகண்டன் மற்றும் போலீசார், ஆட்டோ டிரைவர்களுடன் பேச்சு வார்த்தைக்கு பிறகு ரோடு மறியல் கைவிடப்பட்டது.

Advertisement