சத்தீஸ்கரில் நக்சல்கள் 22 பேர் சரண்டர்; ஆயுதங்களும் ஒப்படைப்பு

3

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நக்சல்கள் 22 பேர் பாதுகாப்பு படையினரிடம் சரண் அடைந்துள்ளனர். ஆயுதங்களையும் ஒப்படைத்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.



சத்தீஸ்கரில் முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு நக்சல்களின் ஆதிக்கத்தை முற்றிலும் ஒழிக்க, மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றன. நக்சலிசம் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.


அந்த வகையில் சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினரின் தீவிர நடவடிக்கைக்கு பயந்து நக்சலைட்டுகள் சரணடைந்து வருகின்றனர். நேற்று அந்த வகையில், தண்டேவாடாவில் 26 நக்சலைட்டுகள் பாதுகாப்பு படையினரிடம் சரண் அடைந்துள்ளனர். அவர்கள் ஆயுதங்களையும் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று பிஜாப்பூர் மாவட்டத்தில், நக்சல்கள் 22 பேர் பாதுகாப்பு படையினரிடம் சரண் அடைந்துள்ளனர். ஆயுதங்களையும் ஒப்படைத்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர். இவர்களில் சிலர் முக்கிய பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement