கண்கெட்ட பிறகு சூரியநமஸ்காரம்; மாநில சுயாட்சி தீர்மானம் குறித்து ஜெயக்குமார் விமர்சனம்

சென்னை: 'நேற்று தி.மு.க., மாநில சுயாட்சி தீர்மானம் கொண்டு வந்தாங்க. கண்கெட்ட பிறகு சூரியநமஸ்காரம் மாதிரி தான் இது,' என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
சென்னையில் அவர் பேசியதாவது; எவ்வளவு சட்டம் ஒழுங்கு பிரச்னை, மக்கள் தினமும் பாதிக்கப்படும் பிரச்னை என எவ்வளவோ இருக்கிறது. அதை எல்லாம் நீங்கள் கேட்க மாட்டிறீங்க. நேற்று தி.மு.க., மாநில சுயாட்சி தீர்மானம் கொண்டு வந்தாங்க. கண்கெட்ட பிறகு சூரியநமஸ்காரம்.
17 வருஷம் ஆட்சியில் இருந்த போது, எவ்வளவோ விஷயங்களை செய்திருக்கலாம். கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு வந்திருக்கலாம். நிதி தன்னாட்சியை மேம்படுத்துவதற்குரிய திட்டங்களை அரசியலமைப்பு சட்டங்களில் சேர்த்திருக்கலாம். கச்சத்தீவு, முல்லைப்பெரியாறு, காவிரி நதிநீர் என பல விஷயங்களை கோட்டை விட்டு விட்டார்கள்.
இன்று மக்களை ஏமாற்றுகின்ற, இவர்கள் தான் பாதுகாவலர்கள் போல, அந்த பிம்பத்தை ஏற்படுத்துகின்ற தீர்மானத்தை கொண்டு வந்து இருக்கிறார்கள். தமிழகத்தில் மக்கள் வாழ கூட முடியாத சூழல் இருக்கிறது. கொலை, கொள்ளை, செயின் பறிப்பு, நாங்குநேரி மாணவன் மீது மீண்டும் தாக்குதல், என இதைப் பற்றி எல்லாம் கேட்டு விடாதீர்கள்.
பா.ஜ.,வுடன் கூட்டணி விஷயத்தில் இ.பி.எஸ்., சொன்னதுதான் என்னுடைய கருத்தும், எனக் கூறினார்.



மேலும்
-
கனடாவில் இந்திய மாணவி சுட்டுக்கொலை; 4 மாதங்களில் 4 பேர் உயிரிழப்பு!
-
துணை ஜனாதிபதியை சந்தித்தார் கவர்னர் ரவி!
-
சினிமாவில் கிடைத்த புகழ் வெளிச்சம் அரசியலுக்கு உதவாது!
-
கர்நாடகாவில் பிரபல தாதா மகன் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
-
வாரிசு அரசியலை வெளிக்காட்டும் பட்டியல்!
-
ஜே.இ.இ., முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு; 24 பேர் முழு மதிப்பெண் பெற்று சாதனை