ஹிந்து மத நம்பிக்கைகளை அவமதித்தால் மக்கள் பாடம் புகட்டுவர்: அண்ணாமலை

34

சென்னை: ''ஹிந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடர்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்'' என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை: தி.மு.க., அமைச்சர்களிடையே, முதல்வர் குடும்பத்துக்கு யார் சிறந்த கொத்தடிமையாக இருப்பது என்ற போட்டியில், மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தை, கோவில் கோபுரம் போன்று அலங்கரித்து, தொழில் போட்டியில் வரம்பு மீறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அமைச்சர் சேகர்பாபு.



கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்கள் என்று கூறிக்கொள்ளும் தி.மு.க.,வினர், காலகாலமாக ஹிந்து சமய மக்கள் நம்பிக்கைகளைப் புண்படுத்துவதையே தொழிலாகக் கொண்டிருக்கிறார்கள். பொதுமக்கள் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.


தனது தொழில் போட்டிக்கு, ஹிந்து சமய அறநிலையத் துறையைப் பயன்படுத்துவதை அமைச்சர் சேகர்பாபு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். மறைந்த தனது தலைவர் மீது அத்தனை பாசம் என்றால், அமைச்சர் சேகர்பாபு, தனது வீட்டு பூஜையறையில் அவரது புகைப்படத்தை வைத்து வணங்கட்டும்.


நாத்திகம் என்ற பெயரில் நாடகமாடி, ஹிந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடர்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கை: மறைந்த கருணாநிதியின் கல்லறை மீது, தமிழகத்தின் தனி அடையாளமான திருவில்லிப்புதூர் கோவிலின் கோபுரத்தை வரைந்து வைத்திருக்கும் தி.மு.க., அரசின் தவறான செயல் கண்டிக்கத்தக்கது.

"பொட்டு வைக்காதே, திருநீற்றை அழி, நாமம் என்றால் பழி" என ஹிந்துக்களின் நம்பிக்கைகளையும், ஹிந்து சமயங்களையும் இழிவு செய்து தி.மு.க., அரசு இதுவரை கேவலப்படுத்தியது போதாதா?

சமாதியின் மீது கோவில் கோபுரங்களை வரைந்து ஹிந்துக் கோவில்களின் புனிதத்தையும் கெடுக்க வேண்டுமா? அதுவும் இந்து அறநிலையத் துறை அமைச்சராக பதவியில் இருக்கும் சேகர்பாபு இவ்வாறு ஹிந்துக்களின் நம்பிக்கைகளை சீண்டிப் பார்க்கும் மனப்போக்குடன் செயல்பட்டமைக்கு அவர் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும்.

மேலும், அந்த பிரச்னைக்குரிய அலங்காரத்தையும் உடனடியாக நீக்கும்படி உத்தரவிட வேண்டுமென முதல்வர் ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.


தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கை: மறைந்த கருணாநிதியின் கல்லறை மீது, தமிழகத்தின் தனி அடையாளமான திருவில்லிப்புதூர் கோவிலின் கோபுரத்தை வரைந்து வைத்திருக்கும் தி.மு.க., அரசின் தவறான செயல் கண்டிக்கத்தக்கது.


"பொட்டு வைக்காதே, திருநீற்றை அழி, நாமம் என்றால் பழி" என ஹிந்துக்களின் நம்பிக்கைகளையும், ஹிந்து சமயங்களையும் இழிவு செய்து தி.மு.க., அரசு இதுவரை கேவலப்படுத்தியது போதாதா?


சமாதியின் மீது கோவில் கோபுரங்களை வரைந்து ஹிந்துக் கோவில்களின் புனிதத்தையும் கெடுக்க வேண்டுமா? பிரச்னைக்குரிய அலங்காரத்தை உடனடியாக நீக்கும்படி உத்தரவிட வேண்டுமென முதல்வர் ஸ்டாலினை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

Advertisement