டூவீலரில் சாகசம் செய்து ரீல்ஸ்; தேசிய நெடுஞ்சாலையில் அத்துமீறிய வாலிபர்கள் கைது

கோவை: கோவையில் டூவீலரில் சாகசம் செய்து ரீல்ஸ் வெளியிட்ட வாலிபர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட நிலையில் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
கோவையில் டூவீலரில் அதிவேகமாக சென்று ரீல்ஸ் எடுத்து சமூக வலைதளங்களில் வாலிபர்கள் 3 பேர் வெளியிட்டனர். இவர்கள் சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் டூவீலரில் சாகசம் செய்து வீடியோ எடுத்து இருந்தனர்.
பொதுமக்கள் அளித்த புகார் படி, ரீல்ஸ் வெளியிட்ட திருப்பூரைச் சேர்ந்த சஞ்சய், டிக்ஸன், தமிழ்நாதன் ஆகியோரைப் போலீசார் கைது செய்து விசாரித்தனர். 3 பேரும் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட நிலையில் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
அவர்கள் அந்த மன்னிப்பு வீடியோவில், ''சாலையில் செல்லும் போது மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் வீடியோ எடுக்காதீர்கள்.போலீசாருக்கும் தொந்தரவாக இருக்காதீர்கள்.
இது குறித்து போலீசார் அட்வைஸ் செய்த பிறகு தான் எவ்வளவு பெரிய விஷயம் என்று புரிந்தது.
நாங்களும் இது மாதிரி பண்ண மாட்டோம், நீங்களும் இது மாதிரி பண்ணாதீங்க'' என தெரிவித்து உள்ளனர்.













மேலும்
-
ஜே.இ.இ., முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு; 24 பேர் முழு மதிப்பெண் பெற்று சாதனை
-
போட்ஸ்வானாவில் இருந்து இந்தியா வரும் சிவிங்கிப்புலிகள்: மே மாதம் கொண்டுவர ஏற்பாடு
-
கே.எப்.சி., சிக்கன் கடைகளுக்கு எதிராக பாகிஸ்தானில் போராட்டம்; ஒருவர் கொலை
-
குஷ்புவின் சமூக வலைதள பக்கத்தை கைப்பற்றிய ஹேக்கர்கள்!
-
ஒரே ஒரு (ஓ)நாயின் விலை ரூ.50 கோடி தானாம்!
-
அந்த நிலையில் நாம் இருந்தால்...?