மீண்டும் சொதப்பியது சென்னை அணி; பஞ்சாப்பிடம் 18 ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது

முல்லான்பூர்: பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் சென்னை அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
பிரிமீயர் லீக் -2025 தொடரின் 22-வது லீக் போட்டியில் சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதின. பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி,பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் விளையாடிய பஞ்சாப் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். இதில் பிரப்சிம்ரன் சிங் 2 பந்துகளை எதிர்கொண்ட நிலையில், முகேஷ் சவுத்ரி பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி வெளியேறினார்.
மற்றொரு துவக்க ஆட்டக்காரரான பிரியான்ஷ் ஆர்யா அதிரடியாக விளையாடினார். 39 பந்துகளில் 9 சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளும் விளாசி சதம் அடித்தார். இறுதியில் 42 பந்துகளில் 103 ரன்களில் நுார் அஹ்மத் பந்தில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த ஸ்ரேயஸ், அஹ்மத் பந்தில் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மார்கஸ் ஸ்டோனிஸ் 4 ரன்களும், வதேரா 9 ரன்களும், மேக்ஸ்வல் 1 ரன்னும் எடுத்து வந்த வேகத்தில் அவுட் ஆகி வெளியேறினர்.
ஷஷாங் சிங், 36 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 52 (அரைசதம்) ரன்களும் மார்கோ ஜான்சன் ஆட்டமிழக்காமல் 34 எடுத்து அணியின் ரன்களை உயர்த்தினர். இறுதியில் பஞ்சாப் அணி, 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்கள் எடுத்தது.
சென்னை அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின், கலீல் அஹ்மத் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அஸ்வின் ஒரே ஓவரில் வதேரா, மேக்ஸ்வெல் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
220 ரன்களை வெற்றி இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணியில், ரச்சின் ரவீந்திரா 36 ரன்களிலும், ருதுராஜ் கெய்க்வாட் 1 ரன்களிலும் , சிவம் துபே 40 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர். மெதுவாக ஆடிய டேவன் கான்வே 69 ரன்களுடன் ரிட்டையர்ட் ஹர்ட் வெளியேறினார் , 3 சிக்சர்கள் விளாசிய தோனி 27 ரன்களில் ஆட்டமிழந்தார். சென்னை அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 18 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.







மேலும்
-
அ.தி.மு.க.,- பா.ஜ., கூட்டணியை பிளவுபடுத்த வேண்டாம்: நயினார் நாகேந்திரன் வேண்டுகோள்
-
"நானும் அரசியலுக்கு வருவேன்" - ராபர்ட் வாத்ரா
-
ஒளி மற்றும் மரபு
-
கண்கெட்ட பிறகு சூரியநமஸ்காரம்; மாநில சுயாட்சி தீர்மானம் குறித்து ஜெயக்குமார் விமர்சனம்
-
டூவீலரில் சாகசம் செய்து ரீல்ஸ்; தேசிய நெடுஞ்சாலையில் அத்துமீறிய வாலிபர்கள் கைது
-
ஹிந்து மத நம்பிக்கைகளை அவமதித்தால் மக்கள் பாடம் புகட்டுவர்: அண்ணாமலை