வரி உயர்த்தியது உயர்த்தியதுதான்: அதிபர் டிரம்ப் விடாப்பிடி

5

வாஷிங்டன்: கார் உள்ளிட்ட சில பொருட்களுக்கு இருதரப்பும் ஜீரோ வரி விதிக்கலாம் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் யோசனையை டிரம்ப் நிராகரித்துள்ளார்.


அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற முதல் நாளிலிருந்து பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் அண்டை நாட்டு பொருட்களுக்கு வரி விதிப்பில் மும்முரம் காட்டி வருகிறார்.


அமெரிக்காவுடனான அதிகரித்து வரும் வர்த்தக பதட்டங்களைத் தணிக்கும் முயற்சியில், ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கார் உள்ளிட்ட சில பொருட்களுக்கு இருதரப்பும் ஜீரோ வரி விதிக்கலாம் முன்மொழிந்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் யோசனையை டிரம்ப் நிராகரித்துள்ளார்.

இது குறித்து டிரம்ப் கூறியதாவது:
20 சதவீதம் வரி உயர்த்தியது உயர்த்தியதுதான். ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து தாங்கள் அதிகம் இறக்குமதி செய்கிறோம். ஐரோப்பிய ஒன்றியம் எங்களுக்கு மிகவும் மோசமாக நடந்து கொண்டுள்ளது, அவர்கள் எங்கள் கார்களை வாங்குவதில்லை.

இந்த வர்த்தகப் பற்றாக்குறையை போக்க, தங்களுடைய கச்சா எண்ணெய்யை வாங்க வேண்டும்.
ஜப்பானைப் போலவே, அவர்கள் எங்கள் விவசாய உற்பத்தி பொருட்களுக்கு முன் உரிமை கொடுப்பதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


இதற்கிடையில், உணவுப் பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்கள் உட்பட அமெரிக்கப் பொருட்களுக்கு 25% வரை வரிகளை விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement