இந்திய ஜோடி தங்கம்: உலக துப்பாக்கி சுடுதலில்

லிமா: உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் சுருச்சி சிங், சவுரப் சவுத்ரி ஜோடி தங்கம் வென்றது.
பெருவில், உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் நடக்கிறது. கலப்பு அணிகளுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் சுருச்சி இந்தர் சிங், சவுரப் சவுத்ரி ஜோடி, 580.20 புள்ளிகளுடன் 2வது இடம் பிடித்து பைனலுக்குள் நுழைந்தது. மற்றொரு இந்திய ஜோடியான மனு பகார், ரவிந்தர் சிங் ஜோடி (579.19 புள்ளி) 4வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றது.
அடுத்து நடந்த பைனலில் சுருச்சி, சவுரப் சவுத்ரி ஜோடி, சீனாவின் கியான்ஜுன் யாவோ, கை ஹு ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 17-9 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.
வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் மனு பாகர், ரவிந்தர் ஜோடி 6-16 என சீனாவின் கியான்கே மா, யிபான் ஜாங் ஜோடியிடம் தோல்வியடைந்து ஏமாற்றியது.
இதுவரை 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என 4 பதக்கம் வென்றுள்ள இந்தியா, 2வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா (2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம்) முதலிடத்துக்கு முன்னேறியது.
மேலும்
-
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்; நயினார் நாகேந்திரன் உறுதி
-
தி.மு.க., நகராட்சி தலைவர் அறையில் புகுந்தது கட்டு விரியன் பாம்பு!
-
ம.தி.மு.க.,வில் கோஷ்டிப்பூசல்; பதவி விலகினார் துரை வைகோ
-
கனடாவில் இந்திய மாணவி சுட்டுக்கொலை; 4 மாதங்களில் 4 பேர் உயிரிழப்பு!
-
துணை ஜனாதிபதியை சந்தித்தார் கவர்னர் ரவி!
-
சினிமாவில் கிடைத்த புகழ் வெளிச்சம் அரசியலுக்கு உதவாது!