தவெக கொடியில் யானை சின்னம்: பதிலளிக்க விஜய்க்கு உத்தரவு

12

சென்னை: த.வெ.க., கட்சிக் கொடியில் யானை சின்னம் பயன்படுத்துவதற்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கிற்கு பதிலளிக்கும்படி அக்கட்சி தலைவர் விஜய்க்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.


நடிகர் விஜயின் த.வெ.க., கட்சிக் கொடியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்துடன் இரண்டு யானைகளும், வெற்றியை குறிக்கும் வாகைப்பூவும் இடம்பெற்றுள்ளது. இந்தக் கொடி அறிமுகம் செய்யப்பட்ட போதே எதிர்ப்பு கிளம்பியது. தேர்தல் கமிஷனிலும் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.


இந்நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச்செயலர் பெரியார் அன்பன் உரிமையையில் நீதிமன்றத்தில், த.வெ.க., கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்த தடை கேட்டு வழக்கு தொடர்ந்தார். இதனை பயன்படுத்துவது தேர்தல் சின்னங்கள் விதிகளுக்கு எதிரானது எனவும் கூறியிருந்தார்.


இதனை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கு குறித்து ஏப்.,29க்குள் பதிலளிக்கும்படி நடிகர் விஜய்க்கு உத்தரவிட்டு உள்ளது.

Advertisement