முனாப் படேலுக்கு அபராதம்

புதுடில்லி: டில்லி அணியின் பவுலிங் பயிற்சியாளர் முனாப் படேலுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
டில்லியில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில், அக்சர் படேல் தலைமையிலான டில்லி அணி (188/5), சஞ்சு சாம்சன் வழிநடத்தும் ராஜஸ்தானை (188/4) 'சூப்பர் ஓவரில்' வீழ்த்தியது.
டில்லி அணியின் பவுலிங் பயிற்சியாளராக, முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளர் முனாப் படேல் உள்ளார். போட்டியின் போது 'பேட்' செய்து கொண்டிருந்த தனது அணி வீரர்களுக்கு ஆலோசனை கூற, சகவீரர் ஒருவரை மைதானத்திற்குள் அனுப்ப முயற்சித்தார் முனாப். இதற்கு நடுவர் எதிர்ப்பு தெரிவித்ததால், வாக்குவாதம் செய்தார். இதனையடுத்து முனாப் படேலுக்கு, போட்டி சம்பளத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம், ஒரு தகுதி இழப்பு புள்ளி வழங்கப்பட்டது.

Advertisement