பிளவக்கல் பெரியாறு அணைக்கு அனுமதி

வத்திராயிருப்பு : பிளவக்கல் பெரியாறு அணைக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேணடுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள பிளவக்கல் பெரியாறு அணைக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மக்கள் வந்து சென்றனர். இதற்காக ஸ்ரீவில்லிபுத்துார், விருதுநகரில் இருந்து அரசு பஸ்கள் இயங்கி வந்தது.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலம் முதல் பெரியாறு அணைக்கு மக்கள் அனுமதிக்கப்படவில்லை. பூங்காவில் அடிப்படை வசதிகள் இல்லாமலும், சேதம் அடைந்தும் காணப்பட்டது. மேலும் யானைகள் நடமாட்டம் இருப்பதால் மக்களை அனுமதிக்க வனத்துறை மறுத்து வந்தது. இதனால் விருதுநகர் மாவட்ட மக்கள் சுற்றுலா செல்ல இடமின்றி தவித்து வந்தனர்.

5 ஆண்டுகளானநிலையில் தற்போது வரை மக்கள் அனுமதிக்கப்படாத நிலையில் எப்போது தான் அனுமதிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். அரசின் சார்பில் பெரியாறு அணை சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளதால் அதற்கான பணிகள் நிறைவடைந்த பிறகு மக்கள் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

Advertisement