காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி

ராஜபாளையம் : ராஜபாளையம் ராம்கோ இன்ஜினியரிங் கல்லுாரியில் காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில் இளம் பசுமை ஆர்வலர் பயிற்சி பெறும் மாணவர்களுடன் கலெக்டர் ஜெயசீலன் கலந்துரையாடினார்.

தமிழக அரசு சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 257 பள்ளிகளில் இளம் பசுமை ஆர்வலர்களை தேர்ந்தெடுத்து இளம் பசுமை ஆர்வலர் எனும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 44 மாணவர்களுக்கான 10 நாள் பயிற்சி முகாம் நடந்து வருகிறது. பங்கேற்ற மாணவர்களுடன் கலெக்டர் ஜெயசீலன் பங்கேற்று சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியம் பல்லுயிர் சமநிலையின் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடினார்.

இதில் தேர்ந்தெடுக்கப்படும் 10 மாணவர்களை அடுத்த கட்ட பயிற்சிக்கு விமானத்தில் அழைத்து செல்லப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். கல்லுாரி முதல்வர் கணேசன், துணை முதல்வர் ராஜ கருணாகரன் ஆசிரியர்கள், சூழல் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement