பக்கவாட்டு தடுப்பு சுவர் இன்றி விபத்து அபாயம்

கீழக்கரை: கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலை வண்ணான் தரவையில் இருந்து மின்வாரியம் செல்லும் வழியில் ஆங்கில எழுத்து 'எஸ்' வடிவில் ரோடு செல்கிறது.

இவற்றில் பக்கவாட்டு தடுப்புச் சுவர் இல்லாததால் வேகமாக வரக்கூடிய வாகனங்கள் எதிர்பாராமல் திரும்பி சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்தை சந்திக்கின்றன.

வாகன ஓட்டிகள் கூறியதாவது:

வண்ணான் தரவையில் இருந்து வளையக்கூடிய 'எஸ்' வடிவிலான தார் ரோட்டின் பக்கவாட்டு பகுதிகளில் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும்.

முன்பு தடுப்பு வேலி கற்கள் அமைக்கப்பட்டிருந்தது. அவை சேதமடைந்ததால் அவ்விடம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.

இரவு நேரங்களில் வெளிச்சம் தரக்கூடிய ரிப்ளக்டர் பொருத்தப்படாததால் இதில் வரக்கூடிய வாகனங்களுக்கு உரிய வெளிச்சம் இன்றி உள்ளது.

எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி பாதுகாப்பு தடுப்பு வேலி கற்கள் அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement