வாழவந்தாள் அம்மன் பங்குனி பொங்கல் விழா

முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே விளங்குளத்துார் கிராமத்தில் வாழவந்தாள் அம்மன் கோயில் 19ம் ஆண்டு பங்குனி பொங்கல் விழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது.

தினமும் அம்மனுக்கு அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடந்தது. பெண்கள் கும்மி அடித்தும், ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும் வந்தனர். முக்கிய நிகழ்ச்சியாக விநாயகர் கோயிலில் இருந்து காப்பு கட்டிய பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி, அலகுகுத்தி சுப்பிரமணியபுரம், முருகன் கோயில் தெரு உட்பட முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர்.பின்பு வாழவந்தாள் அம்மனுக்கு பாலபிஷேகம் நடந்தது. பக்தர்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

வாழவந்தாள் அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது.

முளைக்கட்டு திண்ணையில் இருந்து முளைப்பாரி துாக்கி கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.

Advertisement