திரவுபதி அம்மன் கோயில் காப்புக்கட்டு
நயினார்கோவில் : பரமக்குடி அருகே நயினார்கோவில் திரவுபதி அம்மன் கோயிலில் நேற்று முன்தினம் இரவு காப்பு கட்டப்பட்டது.
ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்தை சேர்ந்த கோயிலில் பூமிதி விழா ஆண்டுதோறும் நடக்கிறது. ஏப்., 7 இரவு அனுக்ஞையுடன் விழா துவங்கி காப்பு கட்டப்பட்டு கொடியேற்றப்பட்டது. நேற்று அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
இன்று சக்தி கரகம் எடுக்கப்பட்டு மகாபாரத கதை ஆரம்பமாகிறது. வல்லம், கரைமேல்குடியிருப்பு, தாளையடிக்கோட்டை, நயினார்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தினமும் பீமவேஷம் நடக்கிறது. ஏப்., 11 இரவு திருக்கல்யாணம் நடக்க உள்ளது.
ஏப்., 13 அர்ஜுனன் தபசு நிலை, அரவான் படுகளம் மறுநாள் துரியோதனன் படுகளம் வைபவம் நடக்கும். ஏப்.,15 இரவு மாவிளக்கு பிரார்த்தனை நிறைவேற்றி, காப்பு கட்டிய பக்தர்கள் பூக்குழி இறங்க உள்ளனர்.
ஏப்., 16 காலை பால்குட விழாவும், இரவு சுவாமி புறப்பாடு, மஞ்சள் நீராட்டுடன் பூக்குழி விழா நிறைவடைகிறது.