ஏப்.,12ல் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

தேனி: மாவட்டத்தில் அனைத்து தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளிலும் ஏப்.,12ல் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.

கூட்டத்தில் பொது வினியோகதிட்டத்தில் உள்ள குறைகள், புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தல்,ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம் மனுக்கள் அளிக்கலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார். தாலுகா வாரியாக முகாம் நடைபெறும் இடங்கள், தேனி ஊஞ்சாம்பட்டி ரேஷன்கடை, ஆண்டிபட்டி, வாலிப்பாறை ரேஷன்கடை, பெரியகுளம் வடுகபட்டி ரேஷன்கடை, போடி காமராஜபுரம் ரேஷன்கடை, உத்தமபாளையம் கருநாக்கமுத்தம்பட்டி ரேஷன்கடைகளில் கூட்டம் நடக்கிறது.

Advertisement