கவுண்டம்பாளையம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு விருது வழங்கும் விழா
கரூர்:கரூர் மாவட்டம், கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், சிறந்த மாணவர் விருது வழங்கும் விழா நடந்தது.
பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் இளமதி தலைமை வகித்தார். கரூர் டவுன் டி.எஸ்.பி., செல்வராஜ் மாணவர்களுக்கு சான்றிதழ், கேடயம் மற்றும் வெள்ளி நாணயம் வழங்கினார். சிறந்த மாணவர்களாக முதல் வகுப்பு பரணிதரன், இரண்டாம் வகுப்பு பிரதஷினா, மூன்றாம் வகுப்பு யுத்ரா, நான்காம் வகுப்பு ஜோஸ்கா, ஐந்தாம் வகுப்பு ஹரிணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
ஆண்டு முழுவதும் விடுப்பு எடுக்காமல், 100 சதவீதம் வருகை தந்தமைக்காக, ஐந்தாம் வகுப்பு மாணவி தன்ஷிகாவுக்கு வெள்ளி நாணயம், சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் பரணிதரன்
செய்திருந்தார்.
தாந்தோன்றி வட்டார கல்வி அலுவலர்கள் சகுந்தலா, கவுரி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வகுமார், ஆசிரிய பயிற்றுனர்கள் சந்திரசேகர், பொன்னுசாமி பள்ளி மேலாண்மைக்குழு துணைத்தலைவர் பூங்கோதை உள்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
மே.வங்கத்தில் மனித தன்மையற்ற செயல்: தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்
-
வெள்ளியங்கிரி மலையில் பக்தர் உயிரிழப்பு