கோவில் உண்டியல் திருட்டு 2 சிறுவர் உள்பட மூவர் கைது


கரூர்:
கரூர், தான்தோன்றிமலையில் உள்ள
வல்லப விநாயகர் கோவிலில் கடந்த, 12 காலை மர்ம நபர்கள் கோவில் உண்டியலை திருடி சென்றனர். பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில், போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அங்குள்ள 'சிசிடிவி' பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், பசுபதிபாளையம் வடக்கு தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன், 19, மற்றும், 17 வயது சிறுவர்கள் இருவர் என மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement