மதுவிலக்கு; சோதனை சாவடிகளில் போலீஸ் தீவிர கண்காணிப்பு

கடலுார் : கடலுார் மாவட்ட மதுவிலக்கு சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் இன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடலுார் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் இன்று மூடப்படுகிறது. இந்நிலையில், அருகில் உள்ள புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்து, கடலுார் மாவட்டத்தில் விற்பனை செய்வதை தடுக்க சோதனை சாவடியில் இருந்த போலீசார், கடலுார் - புதுச்சேரி எல்லையில் உள்ள ஆல்பேட்டை, மருதாடு உள்ளிட்ட மதுவிலக்கு சோதனை சாவடிகளில், மதுபாட்டில்கள் கடத்தலை தடுக்க தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Advertisement