பெண்ணை மிரட்டிய எஸ்.ஐ., மீது ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரை
சிக்கபல்லாபூர்: பாலியல் புகார் அளிக்க சென்ற பெண், அவரது மகளை மிரட்டிய எஸ்.ஐ., மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அரசுக்கு, மனித உரிமைகள் ஆணையம் பரிந்துரை செய்து உள்ளது.
சிக்கபல்லாபூர் சேலுார் பகுதியில் வசிப்பவர் 39 வயது பெண். இவரது மகள் 13 வயது சிறுமி. இந்த சிறுமிக்கு சிலர் பாலியல் தொல்லை கொடுத்தனர். இதுபற்றி புகார் செய்ய தாயும், மகளும் சேலுார் போலீஸ் நிலையத்திற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்றனர்.
போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த எஸ்.ஐ., ஹரிஷ், பெண் அளித்த புகாரை வாங்க மறுத்தார். இதற்கு பெண் எதிர்ப்பு தெரிவித்ததால், துப்பாக்கியை காட்டி மிரட்டியதுடன், 'இனிமேல் புகார் செய்ய வர கூடாது' என்றும் எச்சரித்து அனுப்பி வைத்து உள்ளார்.
இதுபற்றி மாநில மனித உரிமைகள் ஆணையத்தில், வக்கீல் ஒருவரின் உதவியுடன் பெண் புகார் செய்தார். மனித உரிமை ஆணைய அதிகாரிகள் விசாரித்தனர். போலீஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்தனர். எஸ்.ஐ., ஹரிஷ், பெண்ணை துப்பாக்கியை காட்டி மிரட்டும் காட்சிகள் பதிவாகி இருந்தன.
இதை சாட்சியாக அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர். இந்நிலையில், தற்போது மாநில அரசுக்கு, மனித உரிமை ஆணையம் எழுதி இருக்கும் கடிதத்தில், எஸ்.ஐ., ஹரிஷ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், அவரிடம் இருந்து 50,000 ரூபாய் அபராதம் வசூலித்து, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கவும் பரிந்துரை செய்து உள்ளது.
மேலும்
-
லடாக்கில் 4ஜி, 5ஜி இணைப்பு: வெற்றிகரமாக ஏற்படுத்தியது இந்திய ராணுவம்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்