ஜோய் ஆலுக்காஸ் கிருஷ்ண லீலா கலெக் ஷன்

சென்னை : ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம் சார்பில், 'கிருஷ்ண லீலா பிரைடல் கலெக் ஷன்' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பகவான் கிருஷ்ணரின் மயக்கும் கதைகளில் இருந்து, உத்வேகம் பெற்று புராணங்களையும், கலைத் திறனையும் இணைக்கும் நேர்த்தியான படைப்பாக, இந்த தொகுப்பு உருவெடுத்து உள்ளது.

கிருஷ்ண லீலா என்பது கிருஷ்ணரின் கதைகளில் பொதிந்துள்ள, கவர்ச்சிகரமான விளையாட்டுத்தனம், அன்பு, தெய்வீக அழகு ஆகியவற்றுக்கு பெருமை செலுத்தும் முயற்சி.

இந்த தொகுப்பின் ஒவ்வொரு பகுதியும், பண்டைய கோவில் நகைகளின் அழகை தத்ரூபமாக வெளிப்படுத்துகிறது.

பழமையான நுட்பங்களை பயன்படுத்தி, திறமையான கைவினைக் கலைஞர்கள் உதவியுடன் உயிர்ப்பிக்கப்பட்டு உள்ளது. கிருஷ்ண லீலா பிரைடல் தொகுப்பு, உலகம் முழுதும் உள்ள அனைத்து ஜோய் ஆலுக்காஸ் விற்பனை நிலையங்களிலும் கிடைக்கும்.

இது குறித்து, ஜோய் ஆலுக்காஸ் குழுமத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான ஜோய் ஆலுக்காஸ் கூறியதாவது:

கிருஷ்ண லீலா தொகுப்பு பாரம்பரியம் மற்றும் பக்தியின் நித்திய வசீகரத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்த ஒரு சின்னம். இந்த தொகுப்பின் ஒவ்வொரு நுட்பமான வடிவமைப்பிலும், கிருஷ்ணரின் காலம் வென்ற, அற்புத கதைகளின் அம்சங்கள் அழகாக சித்தரிக்கப்பட்டு உள்ளன.

இது, இன்றைய மணப்பெண்கள் பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் அணியக்கூடிய, பாரம்பரியத்தின் கொண்டாட்டம். கிருஷ்ண லீலாவின் பிரமாண்டத்தை அனுபவிக்கவும், இந்த சிறப்பு வெளியீட்டின் ஒரு பகுதியாக இருக்கவும், அனைவரையும் அழைக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement