சர்ச்சைக்குரிய கருத்து எத்னால் மீது வழக்கு

விஜயபுரா: பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்டுள்ள விஜயபுரா எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால், கடந்த 7ம் தேதி ஹூப்பள்ளியில் நடந்த ராம நவமி கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசுகையில், நபிகள் நாயகம் குறித்தும், குறிப்பிட்ட சமூகம் பற்றியும், சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துக்களை தெரிவித்தார்.

இதுதொடர்பாக விஜயபுரா கோல்கும்பாஸ் போலீசில், முகமது ஹன்னன் என்பவர் நேற்று அளித்த புகாரில், நபிகள் நாயகம் குறித்து, எத்னால் பேசிய கருத்து ஒரு சமூகத்தின் மத உணர்வுகளை ஆழமாக புண்படுத்தி உள்ளது.

சமூகத்தில் அமைதி, நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் உள்ளது' என்று குறிப்பிட்டு இருந்தார்.

புகாரின் அடிப்படையில் எத்னால் மீது, மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவாகி உள்ளது.

Advertisement