கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் கல்விக் கட்டண சலுகைக்கு தேர்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் பெற்றோரின் பொருளாதார சுமையையும், மாணவர்களின் கல்வி நலனையும் கருத்தில் கொண்டு பிளஸ் 1 சேர்க்கைக்கு கல்வி கட்டண சலுகை தேர்வு நடத்தப்பட்டது.

இதையொட்டி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலுார் ஆகிய மாவட்டங்களில் இருந்து மாணவர்கள் வந்து செல்ல பள்ளி நிர்வாகம் சார்பில் இலவச பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த, 10ம் வகுப்பு மாணவ, மாணவியர் 1,400 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். பள்ளி முதல்வர் வெங்கட்ரமணன் ஆய்வு செய்தார்.

தேர்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு, பிளஸ் 1 சேர்க்கையில் ரூ.5,555 கட்டண சலுகையும், ஏ.கே.டி., டெக்ஸ்டைல்ஸ் துணிக்கடையில் வரும் 31 ம் தேதி வரை ஜவுளி வாங்கும் போது, 5 சதவீத தள்ளுபடிக்கான கூப்பனும் வழங்கப்பட்டது.

இதற்கிடையே மாணவர்களின் பெற்றோருக்கு, பள்ளி வளாகத்தில் உள்ள எல்.சி.டி., கூட்டரங்கில் உயர்கல்விக்கான வழிகாட்டுதல் சம்பந்தமான ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் பிளஸ் 1 மாணவர்களுக்கான தமிழ்மொழி இலக்கிய திறனறிவு தேர்வில் மாநில, மாவட்ட அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்த, 21 பேருக்கு உதவித் தொகை ரூ.7.56 லட்சம் தரப்பட்டது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

பள்ளி திறனறி தேர்வு எழுதிய மாணவ மணவியர் பெற்ற மதிப்பெண் விவரங்களை வரும் 21ம் தேதி பதிவு எண் அல்லது தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்து ஏ.கே.டி., இணையதளமான www.aktinstitutions.com, ல் அறிந்து கொள்ளலாம்.

மேலும் கட்டண சலுகை குறித்த விவரங்களை, 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகும், மே 19 ம் தேதியன்று, 93611 65429 அல்லது 63691 46590 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மதிப்பெண் மற்றும் ஏ.கே.டி., திறனறித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கட்டணச் சலுகை வழங்கப்படும் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement