மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பன்முக கலாசார போட்டி

சென்னை: மாநில அளவில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கான, பன்முக கலாசாரப் போட்டி, நேற்று சென்னையில் நடந்தது.
மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்காக, முதல் முறையாக கால்பந்து, கபடி, கோ-கோ, கயிறு இழுத்தல், கோலம் உள்ளிட்ட, பன்முக கலாசாரப் போட்டி, மாவட்டம் மற்றும் எட்டு மண்டல அளவில் நடத்தப்பட்டது.
இவற்றில் வெற்றி பெற்ற, 24 மாவட்டங்களை சேர்ந்த, 39 சுய உதவிக் குழுக்களில் உள்ள, 400 மகளிர் பங்கேற்ற, மாநில அளவிலான இறுதிப்போட்டி, சென்னையில் உள்ள நேரு பூங்கா மாவட்ட விளையாட்டு வளாகத்தில், நேற்று நடந்தது. போட்டிகளை துணை முதல்வர் உதயநிதி துவக்கி வைத்தார்.
துவக்க நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சித்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஸ்ரேயா பி. சிங் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். நேற்று நடந்த கால்பந்து போட்டியில், மாநில அளவில் கரூர் முதலிடம், கடலுார் இரண்டாம் இடம் பிடித்தது.
கபடி போட்டியில் அரியலுார், திருப்பத்துார், கள்ளக்குறிச்சி; கயிறு இழுத்தல் போட்டியில், ஈரோடு, கள்ளக்குறிச்சி, வேலுார்; கோலப்போட்டியில், சேலம், கடலுார், நாகப்பட்டினம்; கோ-கோ போட்டியில், கரூர், திருவண்ணாமலை, திண்டுக்கல் மாவட்ட அணிகள், முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றன. பரிசளிப்பு விழா பின்னர் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
என்.ஐ.ஏ.,வால் தேடப்படும் பயங்கரவாதி அமெரிக்காவில் கைது
-
தந்தையின் இறுதி சடங்கில் காதலியை கரம்பிடித்த மகன்
-
அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணி டெண்டர்: ஐகோர்ட் இடைக்கால தடை
-
மவுண்ட் பார்க் பள்ளியில் 'ஸ்காலர்ஷிப்' தகுதி தேர்வு
-
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில் கல்விக் கட்டண சலுகைக்கு தேர்வு
-
பள்ளி சமையல் கூடத்தில் காஸ் கசிந்து தீ விபத்து சமையலர் உள்ளிட்ட 3 பேர் காயம்