சித்திரை 1ல் விஷு கனி தரிசனம்

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் ஏப்.,14 தமிழ் வருட பிறப்பன்று அலங்கார கொலு மண்டபத்தில் 108 வகையான காய், கனி, பழங்கள் தட்டுகளில் வரிசையாக அலங்கரிக்கப்பட்டு கண்ணாடியில் ஐயப்பன் படம் வைக்கப்படுகிறது.

பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த பின் அவர்களுக்கு கை நீட்டம் எனப்படும் காணிக்கை வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.

Advertisement