கத்தியை காட்டி மிரட்டல் விடுத்த இருவர் கைது

திருவாடானை: ரோட்டில் சென்றவர்களிடம் வாள், கத்தியை காட்டி பணம் பறிக்க முயன்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாடானை எஸ்.ஐ., ஜெகநாதன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். திருவாடானை சமத்துவபுரம் அருகே ரோட்டில் நின்ற 2 பேர், அந்தப் பக்கமாக சென்றவர்களிடம் வாள், கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சூச்சனி பாலகிருஷ்ணன் 19, பால்கெல்வின்ராஜ் 19, இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் வைத்திருந்த வாள், கத்தி, டூவீலரை பறிமுதல் செய்தனர்.

Advertisement