தொடக்கப்பள்ளி ஆண்டு விழா

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா வட்டார கல்வி அலுவலர் தமிழரசி தலைமையில் நடைபெற்றது.

வார்டு கவுன்சிலர் சரண்யா, பேரூராட்சி தலைவர் மவுசூரியா முன்னிலை வகித்தனர். விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களின் விளையாட்டுப் போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் ராசு, கவுன்சிலர்கள் வைரவன், விஜயன், அனுராதா, சுதாகர், பாலு, முன்னாள் கவுன்சிலர் தென்றல் ஜலில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement