ஸ்டாலின் குடும்பத்துக்கு பலனளிக்கும் விண்வெளி தொழில் கொள்கை: அண்ணாமலை குற்றச்சாட்டு

51


சென்னை: தமிழக அரசின் விண்வெளி தொழில் கொள்கை, முதல்வர் ஸ்டாலின் குடும்பம் நலன் அடைவதற்காக உருவாக்கப்பட்டது என தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.


தமிழக அமைச்சரவை கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. இதில், பட்ஜெட் மற்றும் மானிய கோரிக்கை விவாதத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், தொழில் துறை உருவாக்கியுள்ள விண்வெளி தொழில் கொள்கை - 2025க்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக சமூக வலைதளத்தில் அண்ணாமலை ஆதாரம் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
தமிழக முதல்வர் ஸ்டாலினின் மருமகன் விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்கியதிலிருந்து, தமிழக விண்வெளி தொழில்துறை கொள்கை எதிர்பார்க்கப்பட்டது.



சபரீசன், 22.07.2024 அன்று முதல் வானம் ஸ்பேஸ் எல்எல்பியின் நியமிக்கப்பட்ட பங்குதாரராக உள்ளார். இந்த நிறுவனம் 20% மூலதன மானியத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த கொள்கையை கோபாலபுரம் குடும்பத்தின் தொழில் கொள்கை என்று அழைப்பது தான் பொருத்தமானதாக இருக்கும்.


தமிழகம் போதிய முதலீடுகள் இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ளது, 2025ம் நிதியாண்டில் புதிய முதலீடுகளுக்காக போராடி வருகிறது. இதோ ஒரு சர்வாதிகார அரசு தங்கள் குடும்பத்திற்கு பயனளிக்கும் வகையில் ஒரு தொழில் கொள்கையை வெளியிடுகிறது. அவமானம்!. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement