பார்க்கிங்கில் நின்றிருந்த காரில் திடீர் தீவிபத்து; ஏ.சி.,யை ஆன் செய்த போது விபரீதம்

திருமலை: திருமலை அருகே பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் திருமலையில் உள்ள திருப்பதி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். பக்தர்களின் வருகைக்காக அங்கு ஏராளமான விடுதிகள், தங்கும் இடங்கள் உள்ளன.
நேற்றிரவு திருமலையில் உள்ள கௌஸ்துபம் விடுதியில் சுற்றுலா பயணிகளின் கார்கள் நிறுத்தப்பட்டிருந்தது. அதில், ரினால்ட் டஸ்டர் கார் ஒன்று திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. கார் தீ பற்றி எரிவதை உணர்ந்த கார் உரிமையாளர் உடனடியாக கீழே இறங்கியதால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
காரில் தீ கொழுந்து விட்டு எரிவதைக் கண்ட அங்கிருந்தவர்கள் பதற்றமடைந்தனர். உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இருப்பினும், காரின் முன்பகுதி முற்றிலுமாக எரிந்து விட்டது.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், காரின் ஏ.சி.,யை ஆன் செய்த போது, மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
ஹிந்து பெண்கள் மீது மனித தன்மையற்ற தாக்குதல்; தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்
Advertisement
Advertisement