வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மீண்டும் பிடிவாரண்ட்

டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது மகள் சைமா வாஜேத் புதுல் மற்றும் 17 பேருக்கு எதிராக குடியிருப்பு நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பான ஊழல் வழக்கில் கைது வாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மாணவர்கள் போராட்டம் காரணமாக வங்கதேச பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்து உள்ளார். ஊழல் குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக வங்கதேச நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்து உள்ளது. இதனையடுத்து அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என வங்கதேச இடைக்கால அரசு, இந்தியாவிடம் கோரிக்கை வைத்து உள்ளது.
இந்நிலையில், ஷேக் ஹசீனா , மகன் சைமா வாஜெத் புதுலு ஆகியோர் மீது அந்நாட்டின் ஊழல் தடுப்பு ஆணையம் சட்டவிரோதமாக குடியிருப்பு நிலத்தை கையகப்படுத்தியதாக குற்றம்சாட்டியது. இருவரும் தலைமறைவாக இருப்பதாக, ஊழல் தடுப்பு ஆணையம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதனை ஏற்றுக் கொண்ட டாகா சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜாகிர் ஹூசைன் கலிப், இருவருக்கும் எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பான குற்றச்சாட்டை விசாரிக்க, மே 4 ஆம் தேதி விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.



மேலும்
-
ராமேஸ்வரம் ரிசார்ட்டில் ரூ.30 கோடி மதிப்புள்ள 60 அறைகளுக்கு சீல்; அமலாக்கத்துறை நடவடிக்கை
-
யுனெஸ்கோ சர்வதேச நினைவு பதிவேட்டில் பகவத் கீதை சேர்ப்பு; பிரதமர் மோடி பெருமிதம்
-
17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை: டில்லியில் பதட்டம்; பலத்த பாதுகாப்பு
-
6 நிமிடத்தில் அரும் பெரும் உயிர் பிழைத்தது; சினிமா பாணியில் செயல்பட்ட போலீசார்
-
பார்க்கிங்கில் நின்றிருந்த காரில் திடீர் தீவிபத்து; ஏ.சி.,யை ஆன் செய்த போது விபரீதம்
-
ஸ்டாலின் குடும்பத்துக்கு பலனளிக்கும் விண்வெளி தொழில் கொள்கை: அண்ணாமலை குற்றச்சாட்டு