சென்னை அணிக்கு மீண்டும் கேப்டனாகிறார் தோனி

10

சென்னை: பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இருந்து காயம் காரணமாக சென்னை அணி கேப்டன் கெய்க்வாட் விலகினார். இதனையடுத்து தோனி மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.


@1br18 வது பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடிய, ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை அணி 4 ல் தோல்வியை சந்தித்து உள்ளது. மும்பை அணியை வீழ்த்திய சென்னை அணி, பெங்களூரு, ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் டில்லி அணிகளுக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்தது.


இதனிடையே, ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக இந்தத் தொடரில் இருந்து விலகி உள்ளார். இதனையடுத்து இந்த தொடரில், சென்னை அணி கேப்டனாக தோனி செயல்படுவார் என அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் அறிவித்து உள்ளார். 2023ம் ஆண்டிற்கு பிறகு சென்னை அணி கேப்டனாக தோனி செயல்பட உள்ளார்.

Advertisement