மொட்டை மாடியில் கஞ்சா சாகுபடி; தணிக்கை அதிகாரி கைது!

திருவனந்தபுரம்: வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடி வளர்த்த தணிக்கைத்துறை அதிகாரி ஜிதின் என்பவர் கைது செய்யப்பட்டார்.
திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய கணக்காளர் அலுவலகத்தில் உதவி தணிக்கை அதிகாரியாக ஜிதின் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு வயது 27. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் கமலேஸ்வரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவர் வீட்டின் மாடியில் கஞ்சா சாகுபடி செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் படி, போலீசார் மற்றும் கலால் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கஞ்சா செடி பயிர் செய்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கஞ்சா செடி பயிர் செய்ததை ஜிதின் ஒப்புக்கொண்டார். அவர் அலங்கார செடியாக கஞ்சா பயிரிட்டதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக அவருடன் வாடகை வீட்டில் வசித்து வந்த அலுவலக ஊழியர்கள் 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து ஜிதின் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். ஜிதின் 4 மாதங்களாக 5 கஞ்சா செடிகளை வளர்ந்து வந்தது விசாரணையில் அம்பலம் ஆனது.

மேலும்
-
சிறுபான்மையினர் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள்: வங்கதேசத்திற்கு இந்தியா கண்டனம்
-
ஏப்.,22ல் சவுதி அரேபியா செல்கிறார் மோடி!
-
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: டில்லி, ஜம்மு காஷ்மீரில் குலுங்கிய கட்டடங்கள்
-
சுற்றுலா பயணிகள், பக்தர்களை குறிவைத்து மோசடி; உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை
-
தமிழகத்தில் கைவினைத்திட்டம்: துவக்கினார் முதல்வர் ஸ்டாலின்
-
ஹிந்து பெண்கள் மீது மனித தன்மையற்ற தாக்குதல்; தேசிய மகளிர் கமிஷன் கண்டனம்